சைவத்தமிழ்
‘தமிழ் பக்தியின் மொழி’ – தனிநாயக அடிகளார்
‘சைவம் சமயமே சமயம்’ என்கிறார் தாயுமானவர்
சைவம் என்பது
சிவனொடு தொடர்புடையது.சிவமென்றால் செம்மை,
நன்மை எனப் பொருள் படும்.
சைவம் சமயம் – செம்மை+ நெறி -செந்நெறி
சைவம் பொதுநோக்கு
உடையது-அனைத்து உயிர்களையும் மாசு நீக்கிப்
பக்குவப்படுத்திச் சிவமாம் தன்மைம பெறச் செய்வதாகும்
வேதகாலத்திற்கு முந்திய சைவம்
வடமொழி வேதங்களின் காலம் கி.மு 1200-கி.மு800 வரை ( ஆர்.டி. பானர்ஜி)
உபநிடதங்களின் காலம் கி.மு 1200-கி.மு 600 வரை ( ஆர்.இ. ரானடே)
தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 400
தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் ‘கடவுள்’ என்ற சொல்லாட்சி.
தொல்காப்பியம் தோற்றம் பெறுவதற்கு முன்பே பல இலக்கியங்கள்
தோற்றம் பெற்றிருக்க வேண்டும்
தமிழில் இருந்த நான்மறை வேதங்கள்
அறம், பொருள், இன்பம், என்;னும் நான்கு வேதங்கள் இருந்திருக்கின்றன.
“அறம்,பொருள், இன்பம், வீடு மொழிந்த வாயான் முக்கண் ஆதி”- (1:53:6- சம்பந்தர்)
“ அருந்தவர்க்கு ஆலின்கீழ் அறம் முதலான நான்கினையும்
இருந்து அவர்க்கு அருளும்”
(8:12:20- மாணிக்கவாசகர்)
சங்க காலத்தில் சைவம் ( கி.மு. 2500 முதல்- கி.பி.100 )
“முக்கண் செல்வன்” அகம்-181.
“மணிமிடற்று அண்ணல்” பரிபாடல்- 19.
“முக்கண்ணான் ”;- கலித்தொகை-2.
சங்கமருவிய காலத்தில் சைவம் (கி.பி.100- கி.பி. 600)
“கொன்றையஞ் சடைமுடிமன்றப் பொதுயினில்
வெள்ளியம்பலத்து” (சிலம்பு.40-41)
“நுதல் விழி நாட்டத்து இறையோன்” (மேகலை 1.54)
சைவத்தின் மறுமலர்ச்சிக் காலம் ( கி.பி.600-1200)
சைவ சமயத்தின்
பொற்காலம் -சமணர்கள் துறவு நெறியை வலுக்கட்டாயமாக மக்களிடம்
திணித்தனர்.
‘சைவப் புண்ணியக் கண்கள்;’ என சேக்கிழாரால் போற்றப்பட்ட அப்பரும்
சம்பந்தரும்
இக்காலத்தில் அவதரித்தனர்.
சிவநெறிக்
கொள்கையைப் போதித்தனர்.
திருநாவுக்கரசரின் சமய நெறி
4,5,6. ஆம் திருமுறைகளைப் பாடியவர்
தமக்கை திலகவதியின் அன்பால் சைவத்தை மீண்டும் தழுவினார்
சிவபெருமானின் பெருமைகளைப் பாடிப் பரவி சைவத்தைப்
பரப்பினார்
இறைவனின் முன் தன்னை தாசனாகப் பாவித்துப் (தாசமார்க்கம் ) பாடினார்.
உள்ளன்போடு இறைவழிபாடு செய்வதையே பதிகங்களில் வலியுறுத்துகிறார்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘உண்ணா நோன்பு’ இருந்து அறவழியில் காரிய சாதனைக்கு முதன்முதலில் வித்திட்டவர்.
திருஞான சம்பந்தரின் சமய நெறி
முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்.
திராவிட சிசு என ஆதிசங்கரால் அழைக்கப்பட்டவர்
இறைவனோடு தந்தை மகன் உறவு முறையில் (சத்புத்ரமார்க்கம்) பக்தி நெறியைக் கடைப்பிடித்தவர்
சுமணர்களுடன் வாதிட்டு சைவத்தை நிலைநாட்டியவர்
திருநீற்றின் பெருமையினைப் பாடிப் பரவினார்
பஞ்சத்தால் வாடிய அடியார்களுக்குப் படிக்காசு பெற்றுப்
பசியைப் போக்கினார்.
சுந்தரரின் சமய வாழ்வு
ஏழாம் திருமுறையைப்
பாடியவர்
இறைவனைத் தோழனாகப் (சகமார்க்கம் )பாவித்து பக்தி நெறியைக் கடைப்பிடித்தார். இறைவனிடத்தில் தோழமை உறவு பூண்டிருந்ததால் ‘நம்பிரான் தோழர்’ என அழைக்கப்பட்டார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிறப்புகளை ‘திருத்தொண்டர் தொகையில் பாடினார்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய பரவிய தேவாரப் பதிகங்கள்
பன்னிருதிருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளாகத் தொகுக்;கப்பட்டனர்.சைவ சமயத்தின் உயிராகக் கருதப்படும்
பன்னிருதிருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்தார்.
கி.பி.575 முதல் கி.பி.718 வரையில் சைவ சமய மறுமலர்ச்சியில் நாயன்மார்கள், பல்வேறு இடங்களைத் நாடி ,தேடி சைவ நெறியைப் பரப்பினர்.
திருமுறை
எட்டு முதல் பன்னிரண்டு வரை
|
8- ஆம் திருமுறை
|
மாணிக்கவாசகர் ( சன்மார்க்கம்-சீடர்)
|
திருவாசகம்,திருக்கோவையார்
|
|
9 -ஆம் திருமுறை
|
திருமாளிகைத்தேவர்,கருவூர்த்தேவர்,சேந்தனார், பூந்துருத்தி காடவநம்பி, கண்டாதித்தர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்
|
29 பதிகங்கள்
திருவிசைப்பா
|
|
10- ஆம்திருமுறை
|
திருமூலர்
|
திருமந்திரம்
|
|
11- ஆம் திருமுறை
|
திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார்,
கல்லாடதேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார்,பரணதேவ நாயனார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள்,
ஐயடிகள்
காடவர்கோன், சேரமான்பெருமாள் நாயனார், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி
|
40 நூற்கள்
|
|
12- ஆம்திருமுறை
|
சேக்கிழார்
|
பெரியபுராணம்
|
சைவச் சித்தாந்த சாத்திரங்கள்
சைவச்
சித்தாந்த சாத்திர நூற்கள் 14.
திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம் , சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றி பஃறொடைவெண்பா,
கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்.
சைவ மடங்களின் பணிகள்
தமிழ்
வளர்ச்சிக்கு சைவ மடங்கள் தொண்டாற்றின. வறுமையில் வாடும் புலவர்களை ஆதரித்து, இலக்கியங்களைப் படைக்கத் தூண்டின.
திருவாவடுதுறைமடம், திருப்பனந்தாள் காசி மடம்,தருமபுரம் மடம் , மதுரை மடம்,வீர சைவ மடங்கள்,பேரூர் மடம், திருவண்ணாமலை மடம், குன்றக்குடி மடம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக