உலகச் செம்மொழிகளும் தமிழும்
உலகில் மனித இனக்குழுக்கள் தோன்றிய சூழலுக்கேற்ப கருத்துப்
பரிமாற்றத்திற்கு மொழிகள் தோன்றின. இம்மொழிகள் பேசுகின்ற இனத்தின் அரசியல் கலை, வரலாறு, சமூகநிலை மற்றும் ஒழுக்க நெறி சார்ந்த எண்ணங்களை
வெளிப்படுத்துகின்றன. மொழிகள் பிறப்பு, இடம் பெயர்தல்,
வளர்ச்சி மாற்றம் பெறுதல் இறப்பு எனப் பன்முகமான
படித்தரங்களைப் அடைகின்றன. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு
முன்புதான் பேச்சு மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது. உலகிலுள்ள மொழிகளை இன அடிப்படையில் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் சைனோ திபெத்திய மொழிகள், செமிட்டோ செமிட்டிக் மொழிகள், உராலிக் அல்டய் மொழிகள், திராவிட மொழிகள், ஆப்பிரிக்க மொழிகள், மலாயே பாலினேனசியன் மொழிகள், அமெரிக்க இந்திய மொழிகள், ஆஸ்திரோ ஆசிய மொழிகள், மலாயே பாலினேசியன் மொழிகள் என வகைப்படுத்தலாம். இம்மொழிக் குடும்பங்களில் தொன்மை வாய்ந்தாய்,
செம்மையான இலக்கியங்களையும், கலைகளையும் கொண்ட மொழி ‘செம்மொழி’ எனப்படும்.
செம்மொழியும் இலக்கியமும்
மொழிகள் மனித இனத்தின் மேம்பாட்டிற்குக் காரணியாகத் திகழ்கின்றன. உலகம் முழுவதிலும் 2796 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றுள் சில மொழிகளுக்கு மட்டுமே பேச்சு வழக்கும், எழுத்து வழக்கும் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு பேச்சு வழக்கு மட்டுமே
உள்ளது
உலக
மொழிகளுள் சீரிய, செம்மையான மொழிகளைச் செம்மொழிகள் அல்லது செவ்வியல்
மொழிகள் என்றழைப்பர். செம்மை ூ இயல்
ஸ்ரீ செவ்வியல், செம்மை ூ மொழி ஸ்ரீ செம்மொழி என்பர். செவ்வியல் என்ற சொல்லுக்கு ‘கிளாசிசம்’ (ஊடயளளiஉளைஅ) என்று பொருள்படும். ஊடயளளளைஇ ஊடயளளiஉரள இலத்தீன்
வடிவத்திலிருந்து ‘ஊடயளளiஉளைஅ’ என்ற சொல் பெறபட்டது. செவ்வியல் மொழி அல்லது செம்மொழி என்பது ‘பழமை வாய்ந்த மொழியாகவும், தொன்மை வாய்ந்த இலக்கிய சிறப்பை உடையதாகவும் மூல மொழியாக இருந்து பிறமொழிகள்
தோன்றுவதற்குத் தாய்மொழியாகவும் இருக்கும் மொழியே செம்மொழி’ எனப்படும். அதாவது, ஓர் இனத்தின்
ஒட்டுமொத்தமான கலை, இலக்கிய உணர்வுகளுக்கு முழுசிறப்புடன் வடிவம் தந்து
நிற்கும் தனித்தன்மைமிக்க இலக்கியங்களைக் கொண்ட மொழியே செம்மொழியாகும். செவ்வியல் என்னும் கருத்தியலை ஐரோப்பிய மொழி
அறிஞர்கள் முதன் முதலில் உருவாக்கினார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்ழற்குப் பிறகுதான் செவ்வியல்
அல்லது செம்மொழிகள் குறித்த சிந்தனைகள் அரிஸ்டாட்டில் தோற்றுவித்து. அதன் காலத்தினை மூன்றாக வகைப்படுத்தினார்.
1. தொடக்கச் செவ்வியல் (ழுசபைin ழக ஊடயளளiஉளைஅ) கி.மு. 750 – கி.பி. 200
2. செவ்வியல் கருத்து வளர்ச்சி பெற்ற காலம் (னுநஎநடழிஅநவெ ழக ஊடயளளiஉளைஅ) கி.பி. 2 – கி.பி. 14
3. செவ்வியலின் பிற்காலம் (Pழளவ ஊடயளளiஉளைஅ) கி.பி. 15 – கி.பி. 18
பொதுவாக, தொன்மைச் சிறப்பு, உயர் இலக்கிய வளம், தூய்மை, இலக்கணங்களுக்கு
அடிப்படையாக அமைதல் ஆகிய பண்புகளைக கொண்ட இலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்கள்
என்பர். செவ்வியல் இலக்கியங்களைப் பற்றி ஜான் சாமுவேல்சன் “எந்த ஓர் இலக்கியத்தின் ஓர் பகுதியை அவ்விலக்கியத்தின் முழுமைக்கும்
கலைச்சிறப்புக்கும் ஊறு ஏற்படாமல் எடுக்கவோ, இணைக்கவோ முடியாதோ அதனை செவ்வியல் இலக்கியம்” என்கிறார். மனித சமுதாயத்தின் பொதுப் பண்புகளை வலியுறுத்தி, தற்சார்பு நிலையின்றி பொதுச்சார்பு நிலையுடன் காலம் கடந்து,
இனம் கடந்து, எப்பொழுதும் வாழும்
நிலைப்பேற்றினைப் பெற்றிருக்கும் இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களாகும்.
மொழி அறிஞர்களின் கருத்துக்கள்
மொழியானது கருத்துப் பரிமாற்றக் கருவியாக விளங்குகிறது. எந்த மொழி காலத்திற்கேற்ப மாற்றத்தினைப்
பெறுகின்றதோ அந்த மொழி வாழும் மொழி எனலாம். அதுவே செம்மொழியாக
நிலைபெறும். பரிதிமாற் கலைஞர்
“திருத்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி” செம்மொழி என்கிறார். செம்மொழி பண்புகளை தேவநேயப் பாவாணர், தொன்மை, ஒலிச்சாhபு; உலகளாவிய உணர்வு பெருமிதம்; சொல்லமைப்பின் தொன்மையும், ஒலிச்சுருக்கமும்; ஒழுங்கான சொல்லமைப்பு காரண கரிhயத் தொடர்புடைய சொல்லமைப்பு; இயற்கைத்தன்மை; தனித்தன்மை உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த
நூற்கோவைகள் போன்றவைகளைச் செம்மொழி பண்புகளாக் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் ஜார்ஜ ஹார்ட் குறிப்பிடுகையில்,
தனக்கே உரிய தனிச்சிற்பபான இலக்கிய மரபினiயும் இலக்கிய வார்த்தையும் பெற்றிருத்தல்; தொன்மை உடைமை; சிறப்பு வாய்ந்த
இலக்கிய மரபு உடைமை; சிறந்த இலக்கியக் கொள்கைகள் பெற்றிருத்தல்;;
விழுமிய இலக்கண மரபுகள் கொண்டிருத்தல்; செவ்வியல் இலக்கியங்கள் பெற்றிருத்;தல்; இக்காலப் புதிய பண்பாட்டு மரபுகளின் முதன்மையான
தனித்துவம் உடைய வாயிலாக விளங்குதல் ஆகிய பண்புகளைக் குறிப்பிடுகிறார்.
மொழியலாளர் அகத்தியலிங்கம் செம்மொழிப் பண்புகளை 1.
மகோன்னதமான ஒரு மேம்பாடு 2. செம்மாந்த குறிக்கோள் 3. சிறந்த ஒரு நிலைபேறு என வரையறுக்கிறார். பொதுவாக, செம்மொழிப் பண்புகளை,
தொன்மை தனித்தன்மை பொதுமைப்பண்பு நடுவுநிலைமை தாய்மைத்தன்மை
இலக்கியவளம் உயர்ச்சிந்தனை மொழிக் கோட்பாடு கலை, இலக்கியத்
தனித்தன்மை வெளிப்பாடு – பங்களிப்பு போன்ற பண்புகளைச் செவ்வியல் பண்புகளாகக்
குறிப்பிடலாம்.
உலகச் செம்மொழிகள்
மனித
வரலாற்றில் நல்ல பழமையும் சிறந்த இலக்கிய பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட பல்வேறு
மொழிகளுக்கும் கலாச்சார கூறுகளுக்கும் வித்திட்டு தலைமை பண்பாக விளங்கும் மொழிகள்
செம்மொழிகளாகும். உலகிலுள்ள இரண்டாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றி ஆறு (2796) மொழிகள் இருந்தாலும் இலக்கிய இலக்கணம் வளம் பெற்றவை 600 மொழிகள் மட்டுமே. இம்மொழிகளுள் ஆறு மொழிகளுக்குத் தான் தொன்மை வரலாறுகள்
உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிரேக்கம், இலத்தீன் மொழிகள் மட்டுமே செம்மொழியாக இருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின் வடமொழியான
சமஸ்கிருதம் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரோமன் எழுத்து முறைக்கு முன்னோடியான கிரேக்க மொழி
ஆங்கிலம், இலத்தீன் போன்ற ஐரோப்பிய மொழிகளுக்குத் தாயாக
விளங்கியது. இம்மொழி மேலைநாட்டு மொழிகளில் மிகப் பழைமையானது. கிரோக்க மொழி கி.மு. 14-ஆம் நூற்றாண்டில் உருவாகியிருக்கக்கூடும். இம்மொழியில் கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதலே எழுதப்பட்ட பல்வெட்டுகளும்
இலக்கியங்களும் கிடைக்கின்றன. கிரேக்க மொழி கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் முழுமை நிலை அடைந்தது என்பர். கி.மு. 500 முதலே கி.மு. 320 வரையிலான காலப்பகுதி கிரேக்கத்தின் செவ்வியல் இலக்கியக்
காலமாகக் கருதப்பட்டது. இம்மொழி இந்நாள் வரையில் கிரேக்க மக்களின் தாய்மொழியாக
இருக்கிறது. எகிப்து, சிரியா, ஆசியா மைனர் ஆகிய
பகுதிகளில இம்மொழி பரவயிருந்தது
இலத்தீன் பேச்சு வழக்கு அற்றுப்போன செம்மொழிகளாகத்
திகழ்கிறது. இலத்தீன் கி.மு. 10-ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் டைபர் ஆற்றங்கரையில் வாழ்ந்த ‘லேட்டியம்’ பகுதியில் வாழ்ந்த லேட்டிய மக்களின் பேச்சுமொழியாக
விளங்கியது. பின்னர் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் ரோம் நகரில் மொழியானது கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலத்தீன் வெறும் பேச்சு மொழியாகவே
இருந்தது. இம்மொழி கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், போர்ச்சுகல் போன்று நாடுகளில் பேசப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவ சமயத்தின்
ஆதிக்கம் காரணமாகக் கத்தோலிக்கக் கிறித்தவச் சமயத்தின் புனித மொழியானது. கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையில் இலத்தீன் மொழியில்
கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சமயத்தின் செல்வாக்கு இருந்தது. இருப்பினும் கி.மு. 70 முதல் கி.பி. 18 வரையிலான காலப்பகுதி இலத்தீன் இலக்கியத்தின் பொற்காலமாகும்.
சீனாமொழி, சைனோ-திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த
செம்மொழியாகும். சீனமொழி குரல் ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட தனிநிலை
மொழியாகும். சீன எழுத்துமுறை கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கருதுpகன்றனர். கி.மு. 30ஆம் நூற்றாண்டில் ட்ஸங்-சீ என்னும் அமைச்சர் சீன எழுத்துக்களை உருவாக்கினார் என்றும் அpறஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இம்மொழியில் 1920இல் எழத்துச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு சீனாவின் தேசிய மொழியாக
அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கி.பி. 200 முதல் கி.பி. 1200 வரையுள்;ள காலமே சீன
இலக்கியத்தின் பொறகாலமாகும். சீன இலக்கியத்தில் கி.மு. 600இல் கன்ஃபூசியஸ் (ஊழகெரஉழைரள), லாவுட்சு (டுயழ-வளந) முக்கிய பங்கு வகித்தனர்.
ஈபுரு (எபிரேயம்) செமிட்டோ செமிட்டிக்
மொழிக் குடும்பத்திலுள்ள செம்மொழியாகும். யூத மக்களின் தாய் மொழியாக விளங்கியது. இசுரயேல், பாலஸ்தீன் நாடடின்
ஆட்சிமொழி எபிரேயம் ஆகும். வலமிருந்து இடமாக எழுதப்படும் இம்மொழி இருபத்திரண்டு
மெய்யொலிகளை மட்டுமே பெற்றுள்ளது. கி.மு. 500இல் இம்மொழியில் ‘அராமைக் (யுசயஅயiஉ) மொழியின் தாக்கம் ஏற்பட்டது. கி.மு. 200இல் அராமைக் மொழி ஈபுரு மொழியை மக்கள் பேச்சு
வழக்கிலிருந்து வெளியேற்றயது. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தான் ஈபுரு மொழியில் (பைபிள்) உயிர்க்குறியீடுகள் படிக்க வசதியாகப்
பயன்படுத்தப்பட்டன. இம்மொழி கி.மு. 12 முதல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரை ஈபுரு மொழியின் செவ்வியில் காலமாகும்.
இந்தியச் செம்மொழிகள்
இந்தியாவில் பலமொழிகள் பேசப்படுவதனால் இந்தியாவை மொழிகளின்
காட்சிச்சாலை (ஆரளநரஅ ழக டுயபெரயபநள) என்றழைப்பர். இந்திய மொழிகளை மொழியறிஞர் அகத்தியலிங்கம் இந்தோ – ஆரிய மொழிகள்; ஆஸ்திரோ – ஆசிய மொழிகள்; சைனோ – திபெத்திய மொழிகள்; திராவிட மொழிகள்,
என நான்காக வகைப்படுத்துகிறார். சமஸ்கிருதம், வங்காளி, அசாமி, குஜராத்தி, இந்தி, கொங்கணி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சிந்தி, உருது, காஷ்மீரி போன்ற மொழிகள் இந்தோ ஆரிய
மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகளாகும். அஸ்திரோ – ஆசிய மொழிகளில் ‘சந்தானி’ குறிப்பிட்ட தகுந்த மொழியாகும். சைனோ – திபெத்திய மொழிகளை,
சைனிக் மெமாழிகள் என்றும் திபெத்திய பர்மிய மொழிகள் என
இருவகையாகப் பிரிப்பர். திராவிட மொழிக் குடும்பதத்தில் (தமிழ், தெலுங்கு, மலையாளம்) இருபத்தி மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன.
இந்திய மொழிகளில் வடமொழியாகிய சமஸ்கிருதம், பாரசீகம், அரேபி, பாலி, பிராகிருதம், தமிழ் ஆகிய மொழிகள்
செவ்வியல் மொழியாகத் திகழ்கின்றன.
சமஸ்கிருதம் பேச்சு வழக்கற்ற செம்மொழியாக இருக்கிறது. பாலி, அர்த்தமாகதி,
பிராகிருமதம், இந்தி, பஞ்சாபி, வங்காளி, குஜராத்தி, போன்ற மொழிகளின் பிறப்பிடமாகச் சமஸ்கிருதம் விளங்குகிறது. இம்மொழி இந்துக்களின் புனித மொழியாகும். சமஸ்கிருதத்தில் மிக பழைமையான ரிக் வேதம் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது. வேதங்கள் உபநிடதங்கள், இராமாயணம், மகாபாரதம் ஆகிய காவியங்கள், மனு சாஸ்திரம், சுக்கிரநீதி, அர்த்த சாஸ்திரம், பாணினியம் போன்ற படைப்புகளைக் கொண்டுள்ளது. ஆன்மீகம், வானியல், கணிதம், சாஸ்திரம், ஆகிய துறைகளில்
சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. சமஸ்கிருதத்தில் வேத இலக்கியம் கி.மு. 1500 முதல் கி.பி 200 வரையிலான காலமாகும். இம்மொழியின் செவ்வியல் இலக்கியகாலம் கி.மு. 5 முதல் கி.பி 1000 வரையிலான காலக்கட்;டமாகும்.
பார்சி, பெர்சியன் எனறழைக்கப்படும் பாரசீக மொழி, ஈரான், ஆப்பானிஸ்தான், தாஜிகிஸ்தான், சைரஸ் ஆகிய நாடுகளில் வழக்கில் இருந்தது. பார்சிய மதத்தின் புனித மொழியாகிய பாரசீகம் அரோபிய
வரிவடிவத்தில்; எழதப்படுகிறது. இந்தியாவில் முகலாய மன்னர்களின் செல்வாக்கினால் வளம
பெற்ற மொழியாகும். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அரேபியாகள் பாரசீக நாடுகளைக்
கைப்பற்றியதால் பாரசீக மொழியின் செல்;வாக்குச் சிதைந்தது.
சமஸ்கிருதத்திற்குப் பேச்சு வழக்கு மொழியாக இருந்த மொழி
பிராகிருத மொழியாகும். கா~;மீரி, சிந்தி, பஞ்சாபி. நேப்பாளி, இராஜஸ்தானி, மராத்தி, குஜராத்தி, வங்காளி போன்ற
மொழிகளு;ககு ‘பிரரிகருத மொழி’
பிற்ப்பிடமாக விளங்கியது. பௌத்த மதத்தின் புனித மொழியான பாலிமொழி பேச்சு
வழக்கற்ற செம்மொழியாகும். இம்மொழி புத்தரின் போதனைகளைத் தாங்கிய மொழியாகும்.
அரபி, செமிட்டிக் மொழி பிரிவினைச் சார்ந்த மொழியாகும். கி.மு. 600 வரை யேமன் நாட்டின் பழமையான பேச்சு மொழியாக
இருந்தது. இருபத்தெட்டு மெய்யொலிகளை உடைய இம்மொழி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. மேலும் கீழம் சில குறியீடுகளை;ப பயன்படுவதால் உயிரொலிகளை அமைத்துக் கொள்ள முடியும். இசுலாமியர்களின் புனித மொழியான அரபி. சவுதி அரேபியா, எகிப்து, ஈராக், லிபியா, அல்ஜிரியா போனற
நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது. அரபி மொழியில் தோன்றிய முதல் செவ்வியல் இலக்கியம்
திருக்குரான் ஆகும்.
தமிழ்ச் செம்மொழி
“திங்களோடும் செழும்பரிதி தன்னொடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்”
எனத்தமிழின் சிறப்பினைப் பாரதிதாசன் பாடுகிறார்.
‘தமிழ்;’ என்ற சொல் இனிமை, நெகிழ்வு எனறும் பொருள்படும். திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழியாகும். தமிழானது தொன்மை, தாய்மை, கொடைத்தன்மை, கட்டுப்பாடு, தனித்தன்மை கலப்பில்லாத தூய்மை, செவ்விலக்கியங்கள் போனறவைகளைப் பெற்றத் திகழ்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கிய
பாரம்பரியம் கொண்ட பண்டைய மொழியாகும்.
தமிழனாது சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கிய இலக்கண மரபுகள், எண்ணங்களைப்
பிரதிபலிக்கும் சொல்வளம், சாகாவரம்பெற்ற கவிதைக் கூறுகள் இளமைத் திறம் போனற
பண்புகளோடு காலத்தாலும் மொழித்தாக்கங்களாலும் அழியாத, அழிக்க முடியாத இலக்கியச் செல்வங்களைப் பெற்றிறுள்ளது. பெருமையை, மொழி அறிஞர்
காலடுவெல் “தமிழ்மொழி பெற்றிருக்கும்; எண்ணி மதிப்பிடற்கியலாச் சொற்செல்வங்களும், செந்தமிழ் மொழியின் பல்வேறு வகைப்பட்ட இலக்கண வடிவங்களும் அம்மொழிப் பழமையை
நிலைநாடடும் சான்றுகளாகும்” எனக் குறிப்பிடுகிறார்.
தமிழும் செவ்வியல்; இலக்கியமும்
சங்க இலக்கிய காலம் தமிழன் செவ்வியல் இலக்கிய காலமாகும். கி.மு. 3 – கி.மு. 2ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழில்
செவ்வியல் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. சங்க இலக்கியங்கள்
தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான பண்பாடடு வெளியீடாகவும், அனுபவங்களின் இலட்சியப்படுத்தப்பட்ட கலை வடிவங்களாகவும்
திகழ்கின்றன. தமிழ்க் கவிதையின் தொடக்;க நிலையான பாணர்களின் காலம் மறைந்து புலவர்களின்
காலம் தோன்றி காலக்கட்டத்தில் செவ்வியல் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இலக்கியத் தரமிக்கத் தொன்மையான தமிழ் வீரயுகப்
பாடல்கள் உலக வீரயுகப் பாடல்களோடு (கிரேக்கம், இலத்தீன், சுமேரியா) தகுதிப் பெற்றவைகளாகும். கி.மு. 5ம் நூற்றாண்டு பழைமையினைப் பண்பாட்டு ரீதியில்
வெளிப்படுத்துகின்றன. பேரறிஞர் சுமில் சுவலபில் “பண்பாட்டு நிலையைப் பொறுத்தவரையில் தமிழ்ப்பண்பாட்டினைச் செவ்வியல் பண்பாடு
என்று அழைக்கலாம் என்கிறார்.
தமிழ்ச் செம்மொழி செயலாக்கம்
தமிழ் தனித்து இயங்கக்கூடிய உயர்தனிச்செம்மொழி என்பதை 1856-இல் திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் கால்டுவெல் குறிப்பிடுகிறார். 1897இல் தமிழ் உயர்;தனிச் செம்மொழி என முதற்குரல் எழுப்பியவர் பரிதிமாற் கலைஞர். 1918-இல் சைவசித்தாந்த
மாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகமும் 1919-20இல் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் செம்மொழித் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. கி.பி. 1966-இல் தேவநேயப் பாவாணரால் வெளியிடப்பட்ட ‘வுhந Pசiஅயசல ஊடயளளiஉயட டுயபெரயபந
ழக வாந றுழசடன’ என்னும் நூல், உலக மொழிகள் அனைததிற்கும் ‘தமிழே’ தாய்மொழி என்று குறிப்பிடுகின்றது. 1995-இல் தஞ்சை எட்டாவது
உலகத்தமிழ் மாநாடு ‘செம்மொழி தீர்மானத்தை முன்மொழிந்தது. 1998-இல் தமிழக அரசு
தமிழைச் செம்மொழியாக்க முயற்சி எடுத்தது. இதன் பயனாக 17.09.2004இல் நடுவண் அரசு தமிழைச் ‘செம்மொழி’ என அறிவித்தது.
செம்மொழி நன்மைகள்
தமிழ்ச் செம்மொழி செயலாக்கத் திட்டம்
ஒழுங்குமுறையாகச் செயல்படுத்தினால்,
தமிழ்மொழிக்கும், தமிழர்க்கும் உலக அளவில் தன்மதிப்பு உயரும்.
பன்னாட்டுமொழிக்கலைக்களஞ்சியங்களில்தமிழ்இலக்கியங்கள், கட்டுரைகள், வரலாறு, பண்பாட்டுக் கருத்துகள் இடம்பெறும்.
இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் உலகப்
பல்கலைக்கழுகங்களிலும் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை நிறுவப்;பெறும்.
இந்திய அரசு நேரடியாக 40 கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் வாயிலாக 100 கோடி ரூபாயும் ஒதுக்கீடுச் செய்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு
உதவி புரியும்.
கல்வெட்டாய்வு, ஓலைச்சுவடி ஆய்வுகளில் தமிழ்மொழியும்
பண்பாடும் கருத்தில் கொள்ளப்படும்.
இந்தி உள்ளிட்ட பிறமொழி பேசும் மக்கள், தமிழின் தொன்மையும் பெருமையும் அறிய வாய்ப்பு கிடைக்கும்.
தேசீய நீரோட்டத்திலிருந்து தமிழர் விலகி நிற்கும்
கசப்பான உணர்வினை நீக்கும்
தமிழ், உலகச் செவ்வியல்
மொழிகளுள் ஒன்றாகும் பிபிசி நிறுவனம் இந்திய மொழிகளில் தமிழ், இந்தி மொழிகளில் மட்டுமே செய்திகளைத் தெரிவிக்கின்றது. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பினைச் செய்கின்றது. யுனெஸ்கோ நிறுவனம் ‘கூரியர்’ என்ற மாத இதழை இந்திய மொழிகளில் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் வெளியிடுகிறது. இலங்கை, சிங்கப்பூரின் ஆட்சி
மொழியாகும். பன்னாட்டு மொழியாக, இந்தியா, இலங்கை, மியான்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரி~pயஸ், பிஜூ, தென்னாப்பிரிக்கா என ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில்
பேசப்படுகின்ற மொழியாகத் தமிழ்ச்செம்மொழி வளம் பெற்றுச் சிறக்கின்றது.